வடகிழக்கில் தொடர் முடக்கத்திற்கு ஆலோசனை!
முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ள நிலையில் வடகிழக்கிலுள்ள ஏனைய சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் குதிப்பது குறித்து ஆலோசித்துவருகிறனர்.
அதேவேளை, முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை காலை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அதிகளவான சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, நீதவான் சரவணராஜாவின் திடீர் பதவி விலகல் தொடர்பில் உடனடி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
Post a Comment