தமிழ் வேட்பாளர் வேண்டாம்:ஜேவிபி

 


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்ற தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்காகவா அல்லது ரணில் விக்ரமசிங்கவிடம் பெட்டிகளை மாற்றிக் கொள்வதற்காகவா என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏதிர்வரும் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் என்கின்ற கருத்து இன்றைக்கு பேசப்படும் பொருளாக மாறி இருக்கின்றது, ஆனால் ஒன்றை நாங்கள் குறிப்பிட்டே ஆகவேண்டும் .தமிழ் வேட்பாளர் அல்லது தமிழ் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.

அதன் மூலமாக இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் தொடர்பான குரல் எழுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் தற்போதைய அறிவிப்பின் மூலமாக ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுடைய வாக்கு வேற யாருக்கும் அல்ல ரணில் விக்ரமசிங்கவுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இன்று மக்களுக்கு நன்றாக தெரியும் மக்கள் அனைவரும் குறிப்பிடுகின்றார்கள் ரணில் விக்ரமசிங்க என்கின்ற நரிக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகின்றார்கள் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.No comments