இலங்கை:எப்போதும் ஆமிக்கே முதலிடம்!



2030இல் படைக்குறைப்பென சர்வதேசத்திற்கு கணக்கு காட்டியவாறு 2024 வரவு செலவுத்திட்டத்தில் படைகளிற்கு கூடிய நிதியை ஒதுக்கியுள்ளது இலங்கை அரசு

 2024 ஆம் ஆண்டு Budget ற்கான ஒதுக்கீட்டு சட்டத்தின் (Appropriation bill,2024) பிரகாரம், பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 423 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது

2023 ஆம் ஆண்டு   பாதுகாப்பு அமைச்சுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 410 பில்லியனுடன் ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான செலவீன ஒதுக்கீடு 3.17 % ஆல் அதிகரித்து இருக்கின்றது 

இது தவிர, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 140 பில்லியன் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது

கல்வி அமைச்சுக்கு ரூபா 237 பில்லியன் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது 

சுகாதார அமைச்சுக்கு ரூபா 410 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

விவசாய அமைச்சுக்கு ரூபா 100 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

நீர்ப்பாசன அமைச்சுக்கு 84 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

கடற்தொழில் அமைச்சுக்கு வெறும் 7 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

தொழில்நுட்ப அமைச்சுக்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

ஜனாதிபதி செயலகத்தின் செலவுகளுக்காக மட்டும் ரூபா 6.6 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது  2024 ஆம் ஆண்டு  ஜனாதிபதி செயலகத்தின் மீளெழும்  செலவுகள் 35 % அதிகமாகவும் மூலதன செலவுகள் 186.3 % அதிகமாகஇருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளளது 

விசேட குறிப்பு : அடுத்த ஆண்டு பௌத்த சாசன அலுவல்கள் திணைக்களத்திற்கு ரூபா 1,666 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது இந்த ஆண்டை விட ரூபா 20 மில்லியன் அதிகமாகும் 

அதே நேரம் தொல்பொருள் திணைக்களத்திற்கு ரூபா 1,976 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது இந்த ஆண்டை விட ரூபா 529 மில்லியன் அதிகமாகும்

No comments