பாலச்சந்திரன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கிய பள்ளித் தோழர்கள்


கிளிநொச்சியில் தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் பிறந்த நாளாகிய இன்று பாலச்சந்திரனின் பள்ளித் தோழர்கள் குருதிக்கொடை முகாமை நடத்தியுள்ளனர்.

பாலச்சந்திரன் நினைவாகவும், சிறுவர் தினத்தை முன்னிட்டும், போரின் போது உயிரிழந்த மாணர்வளை நினைவு கூர்ந்தும் கிளிநொச்சி மகா வித்தியாலய 2015 உயர் தர பழைய மாணவர்களின் எழுகை அமையத்தால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குருதிக்கொடை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(01-10-2023) கிளிநொச்சி பழைய மருத்துவமனை மண்டபத்தில் (பழைய நீர்த்தாங்கி முன்பாக) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை குருதிக்கொடை நடைபெற்றது.

No comments