சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் 

நுணாவிலில் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றின்  உரிமையாளரான கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த பராமநாதன் ஜோதீஸ்வரன் (வயது 41)   என்பவரே உயிரிழந்தவர் எனவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 



No comments