எரிபொருள் விலை அதிகரிப்பு
சிபெட்கோ எரிபொருள் விலை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment