நந்திக்கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு


முல்லைத்தீவு நந்திக்கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியை சேர்ந்த தர்மராசா நிசாந்தன் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 

இளைஞன் நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments