நிலவும் மோசமான வானிலை காரணமாக 15,000 பேர் பாதிப்பு


நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால் 9,500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெள்ளத்தினால் கம்பஹா மாவட்டமே மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசமான வானிலை காரணமாக 377 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments