இலங்கையில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இல்லை!

 


இலங்கையில் புதிய அரச ஆட்சேர்ப்பு ஏதும் நடைபெறாதென மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“15 இலட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன். மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது. என்றார்

No comments