இந்திய மீனவர்களிற்கு தடையில்லையாம்?
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என இலங்கை பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக வடபகுதியில் உள்ள மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் கூட சுதந்திரமாக சென்று மீன் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நெடுந்தீவு கடப்பரப்பில் கூட மீன் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக மீனவ குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தொழில் புரியும் பகுதிகள் அட்டைப்பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சகோதரர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக மீனவர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் மீனவர்களையும் மோத வைக்கும்.
இதனால் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கிலும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை அறுத்தறியும் நோக்கில் தந்திரபாயங்களில் ரணில் அரசு ஈடுபட்டுள்ளதாக சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment