இரவல் சேலையில் நல்லதொரு கொய்யகமாம்



இலங்கை கடற்றொழிலாளர்களுக்காக 1080 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் சீனா அரசாங்கம் இலவசமாக வழங்கிவருகின்ற நிலையில் அதற்கு விழா எடுத்துவருகின்றது ஈபிடிபி தரப்பு. 

கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய்யை நியாய விலையில் வழங்கும் ஆற்றல் இலங்கையிடம் இல்லாத நிலையில் இந்தியா மற்றும் சீனா இலவசமாக மண்ணெண்ணெய்யை  வழங்கி இருந்தது 

ஆனால் சீனா அரசாங்கத்திடம்  இலவச மண்ணெண்ணெய்யை பெற்று அதை இலங்கை கடற்தொழிளர்களிடம் சேர்ப்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் ரூபா 60 மில்லியன் பணத்தை செலவிடுகின்றது 

இதிலொரு பகுதியாக இலவச மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ளுவதற்காக  கடற்தொழில் சங்கங்கள் ஊடக கடற்தொழிலாளர்கள் பிரதேசங்கள் தோறும் விழாக்களை  ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது 

இது போதாதென்று  மேற்படி நிகழ்வுகளில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மாலை மரியாதை, பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் ஈபிடிபி உறுப்பினர்களை விருந்தினராக அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  

உண்மையில் இலவச மண்ணெண்ணெய் கூட்டுறவு திணைக்களம் அல்லது கடற்தொழில் திணைக்களம் ஊடக கடற்தொழில் சங்கங்களின் பங்களிப்புடன் நியாயமான முறையில் பகிரப்படவேண்டும் 

குறிப்பாக நேர்த்தியான பொறிமுறை ஊடக பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும்  இருக்க வேண்டிய  அவசியமுமில்லையென அவதானிகள் தெரிவிக்கின்றனர். 


No comments