மைத்திரி,ஞானசாரர் வழக்குகள்:மே 2024?



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 12(1) பிரிவின்படி (சமத்துவ உரிமை) மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த மனுக்களை அடுத்த வருடம் மே மாதம் 6ஆம் திகதி வாதத்திற்கு ஒத்திவைத்தது.

No comments