கிழக்கில் மீண்டும் இனந்தெரியாதோர்?



கிழக்கில் சிவில் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து ஆயுதக்குழுக்களது செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய இனம் தெரியாத நபர்கள் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, காவல்துறை மற்றும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சிவில் செயற்பாட்டாளர் லவக்குமார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில்  வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு விசேட காவல்துறை பிரிவினர், இன்று கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் வீட்டிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிவில் செயற்பாட்டாளர் லவக்குமார் உட்பட அவரது மனைவி மற்றும் பிள்ளையிடம் வாக்கு மூலத்தினை பெற்றதுடன் அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன், பிரதேசத்தில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீவி ஒளிப்பதிவு கருவிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் அரங்கேறிய படுகொலைகளுடன் பிள்ளையான் குழுவினருக்கான தொடர்புகள் பற்றி செய்திகள் அம்பலமாகிவருகின்றது.

இந்நிலையில்  மனித உரிமை மீறல்கள் பற்றி பேசிவரும் செயற்பாடுகள் பற்றி பேசிவரும் செயற்பாட்டாளர்கள் மீண்டும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர்.


No comments