தமிழரசுக்கட்சிக்கு காலத்திற்கொரு நிலைப்பாடு:ஈபிடிபி



பயங்கரவாத திருத்தச் சட்டத்தை நிறைவேறும் பட்சத்தில் அதனால் தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்றதென ஷஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் கொதிப்படைந்த நிலையில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

ஆனால் கடந்தகாலங்களில் அதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை வேவு பார்த்ததாகவும் அவருக்கெதிரான சதித் திட்டங்களை வகுத்ததாகவும் தெரிவித்து புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை சில தமிழ் அரரசியல் கட்சிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் சாதகமாக பயன்படுத்துவதுடன் தமக்கு சாதகமற்ற காலங்களில் அதற்கு எதிராக பொது வெளியில் கூச்சலிடுவதும் ஏன் என்று புரியவில்லை.


நல்லாட்சி அரசு காலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு வழிவகை செய்து கொடுத்தவர்களும் அதில் பங்கெடுத்தவர்களும் மௌனமாகவே இருந்தனர்.

ஆகவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ் தரப்பினருக்கிடையே இருக்கின்ற ஒன்றுமையீனத்தை கழைந்து அனைத்த தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டுடன் அரசியல் தீர்வுக்கான வழியை தேடுவதே சிறந்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments