ஹமாசின் அரசியல் பணியகத்தின் முதல் பெண் கொல்லப்பட்டார்


ஹமாஸின் அரசியல் பீரோவில் இருந்த முதல் மற்றும் ஒரே பெண் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசின் அரசியல் பணியகம் (அரசியல் பீரோ) முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாகும்.

ஹமாஸின் இணை நிறுவனர் அப்தெல் அஜீஸ் அல்-ரான்டிசியின் விதவையான ஜமிலா அல்-சாந்தி, ஹமாஸில் பெண்கள் இயக்கத்தை நிறுவி, 2021 இல் அரசியல் பணியகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆனார்.

No comments