அதிகரிக்கும் பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்களும் கைது நடவடிக்கைகளும்!!


இஸ்ரேல் தாக்குதலில் அக்டோபர் 7 ஆம் நாள் முதல் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன்  13,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் கூறினார்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் 1,250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக உள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் 65 பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 முதல், மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது.  இந்த எண்ணிக்கையில் செவ்வாய்க்கிழமை காவலில் வைக்கப்பட்ட காசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கவில்லை.

No comments