யாழில். மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு


மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்து கொண்டிருந்த போதே மின்சாரம் அவர் மீது பாய்ந்தது.

அதனை அடுத்து இளைஞனை அங்கிருந்து மீட்டு,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


No comments