வயிற்று வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு


கிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான இந்துஜன் பானுசா (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ம் திகதி இரவு வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


No comments