இஸ்ரேலில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை


இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ஜயதிலகவின் சடலம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா  கருத்துத் தெரிவிக்கையில்”  அனுலாவின்  உடலை இலங்கைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாகவே இந்த நாட்டில் இருந்துள்ளார். அவருக்கு செல்லுபடியாகும் விசாவும் இருந்தது. அதன்படி, போரில் உயிரிழக்கும்  இஸ்ரேலிய குடிமக்களுக்கு இணையான அனைத்து இழப்பீடுகளும் அந்த நாட்டிலிருந்து அவரது குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளது” இவ்வாறு  காமினி தெரித்துள்ளார்

No comments