இளவலையில் சிகரெட் பெட்டிகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் இளைஞன் ஒருவர் இளவாலை பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பனிப்புலம் அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது இளைஞனிடம் இருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞனை இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment