இயலாதவர்களும் வாக்களிக்க நடவடிக்கை


நிரந்தரமாக இயலாமைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு வாக்கை அடையாளமிடும் போது பயன்படுத்தக்கூடிய தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் முன்னோடி நிகழ்ச்சி திட்ட முதற்கட்ட கலந்துரையாடல் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ் தலைமையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

 இக்கலந்துரையாடலில் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் செயன்முறையின் முக்கியத்துவம் தொடர்பான சிவில் அமைப்புகளின் பார்வை , தேர்தல் செயன்முறையில் இயலாமைக்கு உட்பட்ட நபர்களை சேர்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் சவால்கள், இயலாமைக்குட்பட்ட நபர்கள் அடங்கிய தேர்தல் செயன்முறை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறை பயன்பாடு, இயலாமைக்குட்பட்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அடையாளஅட்டையை காட்சிப்படுத்தல் , அறிமுகப்படுத்தப்படும் அடையாளஅட்டை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல் என்பன தொடர்பாக நடைபெற்றன. 

 இதில் தேர்தல் ஆணையாளர் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க , மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், இயலாமைக்கு உட்பட்ட நபர்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தவிசாளர் திருமதி.ராசாஞ்சலி பதிரகே, பவ்ரல் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சுஜீவ கயனாத், மேலதிக தேர்தல் ஆணையாளர் திரு.எஸ்.அச்சுதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதி மற்றும் இயலாமைக்குட்பட்டவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

No comments