ஜேர்மன் மொழி பரீட்சையில் சித்தியடைந்த யாழ்.இந்து மாணவர்கள்


ஜேர்மன் மொழி பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 09 பேர் சித்தியடைந்துள்ளனர்.

Goethe நிறுவனத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நடத்தப்பட்ட "Fit in Deutsch A1" பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் திறமைச் சித்தியையும்,  ஏனைய 6 மாணவர்கள் சாதாரண சித்தியும் பெற்றுள்ளனர். 

முதற் தடவையாக யாழ் இந்து மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments