நெடுந்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் திங்கட்கிழமை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் (வயது 25) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார். 

இளைஞனின் வீடு அருகில் உள்ளதால் , தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில் , நேற்றைய தினம் திங்கட்கிழமை உணவருந்த இளைஞன் வராததால் , வீட்டார் இளைஞனை தேடி சென்ற போது , பூட்டிய வீட்டினுள் படுக்கையில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார். 

அது தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் , உட்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

No comments