மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகம்


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

நாளை புதன்கிழமை(04) காலை 9 மணிக்கு  யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன அழைப்பு விடுத்துள்ளன.


No comments