சாவகச்சேரியில் கண்டி வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த பழமையான மரம்


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைபட்டு இருந்ததுடன் , நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி நகர் பகுதியில் நின்ற சுமார் 200 வருட காலத்திற்கு மேற்பட்ட வேப்ப மரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது. 

அதனால் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் மின்சார வயர்களுக்கும் மேலும் மர கிளைகள் விழுந்தமையால் , மின்சார கம்பங்கள் முறிவடைந்ததுடன் , நகர் பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது. 

அத்துடன் மரத்திற்கு கீழ் இருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கெட் விற்கும் கடையும் சேதமடைந்ததுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது. 

சாவகச்சேரி நகர சபை , இலங்கை மின்சார சபையினர், நகர் பகுதி வர்த்தகர்கள்,  பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதுடன் , வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்தனர். 
No comments