யாழில் தினமும் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் தெரிவிக்கையில் , 

யாழில். வீதி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து உள்ளமையால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர். 

அதனால். தினமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துக்கின்றனர். 

தலைக்கவசம் அணியாமை , போதையில் வாகனம் செலுத்துதல் , சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் , காப்புறுதி மற்றும் வரி அனுமதி பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல் , வீதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

அவர்களில் சுமார் 10 வீதமானவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. ஏனையோருக்கு தண்டம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தார். 

No comments