ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம்
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.
இதேவேளை ஒன்லைன் மூலம் அமைப்புக்களை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இங்கு அவர் உரையாற்றி இருந்தார்.
ஸ்மார்ட் நாட்டிற்கு முன், ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்மார்ட் கட்சியாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப சகல துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்காக அரச நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஊழலைக் கட்டுப்படுத்த பல கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டுக்காக பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஸ்மார்ட் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment