சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்.வாசி லெபனான் சிறையில்
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் லெபனான் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள தனது கணவரை மீட்டு , நாட்டுக்கு அழைத்து வருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் தெரியவருவதாவது ,
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் எனும் இளைஞன் முகவர் ஒருவரை நம்பி, பிரான்ஸ் செல்வதற்காக பெருந்தொகை பணம் கொடுத்துள்ளார்.
அதனை அடுத்து முகவர் ஒருவர் குறித்த நபரை பல்வேறு நாடுகளுக்கு அழைத்து சென்று இறுதியாக லெபனான் நாட்டின் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்நிலையில் லெபனான் நாட்டு சிறையில் உள்ள தனது கணவரை நாட்டுக்கு அழைத்து வருமாறு அவரது மனைவி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment