2 அமெரிக்க பிணைக் கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்!!
ஹமாஸ் பிணையக் கைதிகளாக தனது காவலில் வைத்திருந்த இரண்டு அமெரிக்க குடிமக்களை விடுவித்ததுள்ளது. பிணைக் கைதிகளாக இருந்த ஜூடித் மற்றும் நடாலி ரானன் ஆகிய இரு அமெரிக்கப் பெண்களை விடுவித்ததாக ஹமாஸ் வெள்ளிக்கிழமை கூறியது. அவர்களின் விடுதலையை இஸ்ரேல் உறுதி செய்தது.
இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வரவேற்றார். இந்த விடுதலையை கத்தார் மத்தியஸ்தம் செய்தது. 10 அமெரிக்கர்கள் இன்னும் காணவில்லை என்றும் சிலர் ஹமாஸ் போராளிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிளிங்கன் உறுதிப்படுத்தினார். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்குமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் பிளிங்கன் வலியுறுத்துகிறார்.
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளை இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சந்திப்பார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தினார்.
Post a Comment