மட்டக்களப்பில் திலீபனை நினைவேந்திய மக்கள்

தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் செவ்வாய்க்கிழமை (26) பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தியாக தீபம்

திலீபனின் திரு உருவ படத்திற்கு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வடகிழக்கு முன்னேற்ற கழகம் மட்டக்களப்பு வலிந்து காணாமல்போன உறவினர்கள் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த தியாகதீபம் திலீபனின் 36 நினைவேந்தல் மட்டு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். வடகிழக்கு முன்னேற்ற கழக தலைவர் கு.வி.லவக்குமார், மட்டு. மாநகரசபை முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் வணபிதா ஜோசப் மேரி, வலிந்து காணாமல்போனோரின் உறவுகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தீயாக தீபம்  தீலிபனின் இறுதி மூச்சான 10.48 மணிக்கு அன்னாரது திரு உருவபடத்திற்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர்தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

No comments