பஸில் விசாரிக்கப்படவேண்டும்!


அரசியல் அதிகாரதிற்காக ராஜபக்சே குடும்பம்  சதி செய்ததில்லை என பசில் ராஜபக்சே சொல்லுகின்றார் .

ஆனால் இதே பசில் ராஜபக்சே 2007ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் வாக்கெடுப்பில் தடுமாறிய தங்கள் ஆட்சியை தக்கவைக்க சதி செய்தார் .

இதற்காக தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை பிள்ளையான் ஊடக  கடத்தி அவர்களை  வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாமல்  தடுத்தார் 

2007 ஆம் ஆண்டு கார்த்திகை 7 ஆம் திகதியன்று பாராளமன்ற உறுப்பினர்  கனகசபையின்  மருமகனை  பிள்ளையான் மூலம்  கடத்தினார் 

இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதியன்று  மட்டக்களப்பு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களாகவிருந்த 

செல்வி தங்கேஸ்வரியின் அவர்களின் செயலாளர் நாகலிங்கம், ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உறவினர்  அருணாசலம் சிவபாலன்

 அரியநேத்திரன் அவர்களின் சகோதறார்  ஸ்ரீஸ்கந்தசேயா ஆகியாரை  பிள்ளையான்  கும்பல் மூலம் கடத்தி அவர்களை  அச்சுறுத்தி  தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து பசில் ராஜபக்சே அதிகாரத்த்தை தக்க வைக்க  சதி செய்தார் 

இந்த சதி மூலம் 2007 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தடுமாறிய தங்கள் ஆட்சியை காப்பாற்றினார்கள் 

ஆனால் இப்போது எல்லாவற்றையும் மறைத்து விட்டு அதிகாரத்திற்காகதங்கள் குடும்பம்  சதி செய்வதில்லை என பசில் ராஜபக்சே என்கிற சாத்தன் வேதம் ஓதுகின்றது 

அரச அதிகாரத்தை பெற்று கொள்ளவும் தக்க வைத்து கொள்ளவும் பல மோசமான குற்றச்செயல்களில் பசில் ராஜபக்சே ஈடுபட்டு இருக்கின்றார் 

பிள்ளையான் போல பலரை பயன்படுத்தி தமிழ் சிங்கள சிவில் செயல்பட்டார்கள் , ஊடகவியாளர்கள்  என பலரை பலி எடுத்த குற்றச்செயல்களில் கோட்டாபய ராஜபக்சேவுடன் பசில் ராஜபக்சேவும் ஈடுபட்டு இருக்கின்றார் 

ஈஸ்டர் தாக்குதல, மைத்திரிபால சிறிசேன காலத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்ற சதி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி பலியான விபத்து என ராஜபக்சே காலத்தில் நடைபெற்ற  சம்பவங்கள் பல அதிகார பசிக்காக நடத்தப்பட்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது 



No comments