நல்லூரான் காளை மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு


நல்லூரான் காளை மாடு முட்டி ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த நித்தியசிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில் பணியாற்றும் பணியாளர் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை நந்தவனத்தில் வளர்க்கப்படும் காளை மாட்டிற்கு உணவளிக்க சென்ற சமயம் மாடு அவரை முட்டியுள்ளது. 

மாடு முட்டியதில் காயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். 

நல்லூர் மகோற்சவம் இன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது மகோற்சவ காலத்தில் நல்லூரில் பணியாற்றி வந்தவர் நல்லூரான் திருவடியை சென்றடைந்துள்ளார். 

No comments