யாழ்.பல்கலை முன்பாக போராட்டம்
தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறை வரிக் கொள்கை மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் இடம்பெற்றது.
“அரச பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் வெளிச்செல்லும் மூளை வளத்தை நிறுத்தவும்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் சகல அரச பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின்(FUTA) அழைப்பில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதுடன் வரிக்கொள்கைக்கு எதிராவும் மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
Post a Comment