கொக்கிளாயில் ஏன் அதிரடிப்படை!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்கின்ற நிலையில் இலங்கை அதிரடிப்படையினரின் தலையீடு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்பாN;ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.
ஏழு நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கையுறையின்றி தடயப் பொருட்களை கையாளும் போது அவற்றிலிருக்கும் தடயங்கள் சிதைவடைவதற்காக சாத்தியம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கையுறையின்றி தொல்லியல் பொருட்களை கையாள முடியும் காரணம் அவை நூற்றாண்டுகள் கடந்தவை, தற்போது அகழப்படுவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்துள்ள தொல்லியல் பொருட்கள் இல்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவை குறிப்பாக இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் போது முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment