இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க கைது!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை ஓரா ஆகிய அணிகளின் வீரர்கள் இருவரை,ஆட்ட நிர்ணயத்துக்கு சசித்ர சேனாநாயக்க, தூண்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய சசித்ர சேனாநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் சுகததாச விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள பிரிவுக்கு வந்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

No comments