யாழில். குளியலறை பொருட்களுடன் ஒருவர் கைது


புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வீட்டில் இருந்து 06 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்று புனரமைக்கப்பட்டு வருகின்றது. அந்நிலையில் வீட்டில் புதிதாக பொருத்துவதற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த குளியலறை பொருட்கள் உள்ளிட்ட சுமார் 06 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டு இருந்தன.

தொடர்பில் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரால் திருடப்பட்ட குளியலறை பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments