நினைவேந்தல் என்பது மக்களின் உரிமை!



 நினைவேந்தல் என்பது மக்களின் உரிமை. அதனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்புக்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.

எல்லாளன் அரசனை போரில் கொன்ற துட்டகைமுனு அரசன், அவனுக்கு நினைவுத் தூபி  அமைத்து, மரியாதை செய்யவேண்டுமென்று உத்தரவிட்ட வரலாற்று நிகழ்வு இலங்கையில் இருக்கிறது. அது வெறும் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டதாக மட்டுமே இருக்கின்றது.

பொலிஸாருக்கு முன்னிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிங்கள காடையர்களால்  தாக்கப்படுவது என்பது இலங்கையில் சட்டம் ஒழுங்கு எந்தளவு சீர்குலைந்திருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது. இந்தக் காடையர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.  ஏற்கனவே பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் இலங்கைக்கு நல்லதல்ல. வரலாற்றில் இருந்து பாடம் படிக்காவிட்டால் இந்த நாடு நாசமாய் போவதை யாருமே தடுக்க முடியாது. 

No comments