முன்னுக்கு வர அழைக்கிறது முன்னணி!யாழ்ப்பாணம், பலாலி – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக் காணியை சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து அதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

காணி சுவீகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மண்ணை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டுமெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், அழைப்பு விடுத்துள்ளார்.

தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்படட  பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை திறந்து வைக்கப்பட்டிருந்தது.

தையிட்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments