சர்வதேச தலையீடு இன்றி சாத்தியமில்லை:மார்க்கார்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச உறவுகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைக்கு செல்லாமல் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முற்படுவது கேலிக்கூத்தானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குழுக்களின் ஊடாக தீர்வு காண முயற்சிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை அதிகரித்து தீர்வுகள் நசுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உறவுகளுடன் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கர்தினால் கருத்து தெரிவித்துள்ளதாகவும், ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸாரின் ஆதரவுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் நாம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான விசாரணையை நடத்தும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நாட்டு மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படாத வகையில் நாம் செயற்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்த மக்களின் பிடியில் இருந்து விடுபட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனநாயக ஆட்சியை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆனால் அவ்வாறான நிலை ஏற்படுவதாக தெரியவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
ஜனநாயகத்தின் இருப்புக்கு சவால் விடும் சமூகம் தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்
Post a Comment