வெளிவருகின்றது இரகசியங்கள்!

ஈஸ்டர் 19, தாக்குதல்தாரி சஹ்ரானின் வாகனம் ராஜபக்சே சகோதரர்கள்  மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு வக்காலத்து வாங்கும்  சரத் வீரசேகர மற்றும் அவரின் மகனின் பாவனையில் நீண்டகாலம் இருந்தது .அடையாளம் காணப்பட்ட சஹ்ரானின் வாகனம் நீதிமன்ற சான்றுப்பொருளாக வைத்திருக்க வேண்டும் .ஆனால் எந்தவித நீதிமன்ற தலையீடுகளுமின்றி சஹ்ரான் வாகனத்தை அரசுடைமையாக்கி சரத் வீரசேகரவின்  பாவனைக்கு யார் வழங்கினார்கள் தொடர்பான எந்த விசாரணைகளும் இதுவரை நடத்தப்படவில்லையென அவதானிகள்  தெரிவித்துள்ளனர். 

அதேபோல  கோட்டாபய ராஜபக்சே கருணாவிற்கு Kokila Gunawardena என்கிற பெயரில் D1944260 இலக்க  ராஜதந்திர கடவுசீட்டு பெற்று கொடுத்து இங்கிலாந்து அனுப்பி இருந்தார் 

போலி கடவு சீட்டு வழங்குவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதிலும் இது தொடர்பாகவும் கூட எந்த விசாரணைகளும்  நடத்தப்படவில்லை 

ஈஸ்டர் 19 தாக்குதல் சம்பவத்தின் மூளையாக அடையாளப்படுத்தப்படும் ராஜபக்சே கூட்டாளி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இவ்வாறான போலி கடவுசீட்டுகளின் தந்தை என சரத் பொன்சேகா உறுதி படுத்தி இருக்கின்றார்

இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் அவர்கள் கூட ஈஸ்டர் 19 தாக்குதல்  ஒரு சதி என அடையாளப்படுத்தியுள்ளார். 

No comments