இந்தியா: சீனா எதனையும் பிடிக்காது:ரணில்



தான் இந்திய ஆதரவாளனோ அல்லது சீன ஆதரவாளனோ இல்லை இலங்கை ஆதரவாளன் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சில காலத்திற்கு முன்னர் என்னை ஒரு நான் சீன ஆதரவாளனா இந்திய ஆதரவாளனா என கேட்டனர். நான் அதற்கு உறுதியாக நான் இந்திய ஆதரவாளனோ சீன ஆதரவாளனோ இல்லை என தெரிவித்தேன்.

ஆத்துடன் நான் அதற்கு நடுநிலைவாதியில்லை இலங்கை ஆதரவாளன் என குறிப்பிட்டேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வல்லரசுகளின் அல்லது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின்  முன்னுரிமைக்குரிய விடயங்கள் இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் இல்லை என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை எனவும்  ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்திலும் தென்பசுபிக்கிலும் இலங்கை தீவு வலிமை மிக்க நாடுகளிடையேயான மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதை  ரணில்விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சீனா மற்றும் இந்தியா சமூக பொருளாதார சூழல் பாதுகாப்பு  போன்ற விடயங்களில் தங்களின் முன்னுரிமைகளை கொண்டுள்ளன தங்களின் இறைமையையும் சுதந்திரத்தையும் மதிக்கவேண்டும்.

தனது தன்னாட்சியை மதிக்கும் எவருடனும் இலங்கை இணைந்து செயற்பட தயாராகவுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


No comments