பொறுப்பாக எம்பி செயற்படவில்லை:செந்தில்!
நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் நாடாளுமன்ற உறுப்பினரால், காவல்துறை அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றிருக்கிறது.
அது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.
தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது.
அப்பொறுப்பில் அவதான குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.
எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், கிழக்கின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொழும்பில் மருதானை பிரதேசத்திற்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருதானையில் உள்ள சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செயற்பட்டிருந்தன.
இதனிடையே நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட வேளை புத்த தர்மத்தின் அடிப்படையில் புத்த பெருமானின் வழியை இறுதித் தருணத்தில் கடைப்பிடித்த திலீபனின் இறுதி வாழ்க்கை காலம் தொடர்பாகவும் நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாட எதிர்பார்த்திருந்தேன்.இருந்த போதிலும் அதற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தாம் மதிப்பளித்து செயற்படுவதாக அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment