சம்பத் வங்கி:நெஞ்சில் குத்தியது!



வவுனியா ஊற்றுக்குளம் சிங்கள குடியேற்றத்தில் உருவாகி வரும்  சபுமல்கஸ்கட விகாரைக்கு (Sapumalgaskada Pabbatarama vihara) சம்பத் வங்கியின் (Sampath Bank) பௌத்த சங்கம் நன்கொடை வழங்கி இருக்கிறது 

வடக்கு கிழக்கில் 30 கிளைகளுடன் தமிழ் சமூக வைப்புகளை இலக்கு வைத்து  இயங்கும்  சம்பத் வங்கி குறித்த பகுதி தமிழ் மக்களுக்கு எதிரான  வவுனியா  சிங்கள  குடியேற்றத்தின் பிரதான தளங்களில் ஒன்றாக உருவாகும்  விகாரையின் கட்டுமானங்களுக்கு பங்களிக்கின்றது 

மேற்படி வவுனியா வடக்கு  ஆக்கிரமிப்புகள் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று சிங்கள குடியேற்றங்கள்  வரை விரியும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றன 

இதன் மூலம் தமிழ் சமூகத்தின் நில தொடர்ச்சியை சிதைத்து  வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் தனியான நிர்வாக அலகு கொண்ட சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயலுகின்றார்கள்

No comments