முல்லைத்தீவை வந்தடைந்தது திலீபனின் ஊர்தி

திருகோணமலையில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மாங்குளம், கிளிநொச்சி ஊடாகப் பயணித்து

இன்று வட்டக்கச்சியில் இன்று நினைவு வணக்க நிகழ்வுகள் நடந்தன.

நேற்று முன்தினம் (17) திருகோணமலை - கொழும்பு வீதியில், கப்பல்த்துறைக்கு அண்மையிலுள்ள சர்தாபுர பகுதியில் சிங்களக் காடையர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியிருந்தது.

இதன்போது, ஊர்தியுடன் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்டவர்களும் தாக்கப்பட்டனர்.

இதன் பின்னர் ஊர்த்தியானது மாங்குளம் வந்தடைந்தது. பின்னர் நேற்று கிளிநொச்சி ஊடாகப் பயணத்தித்து இன்று முல்லைத்தீவை வந்தடைந்தது.


No comments