கட்டப்பிராய் இளைஞன் தமிழகத்தில்?

 


யாழ்ப்பாணம், கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சர்ச்சைக்குரியவகையில் தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக கைதாகியுள்ளார்.; யாழ்ப்பாணம், கட்டப்பிராய் இளைஞன், படகும் மூலம் தனுஸ்கோடியில் இறங்கி அங்கிருந்து காவல் நிலையத்திற்கு வந்து அகதியாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து காவல்துறையினர் தனுஸ்கோடி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னராக மத்திய உளவுதுறையிடம் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து  அவரிடம் தொடர்ந்து விசாரணையினை மத்திய புலானய்வு பிரிவினர் நடத்தி வருகின்றனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments