மொரோக்கோ நிலநடுக்கத்தில் 2012 பேர் பலி! 2059 பேர் காயம்!!


வடக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 2012 பேர் உயிரிழந்தாகவும் மேலும் 2059 பேர் காயமடைந்தாகவும் மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 11:11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.8 ரிக்டரில் பதிவாகியுள்ளது.  மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், றிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டு இறந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மக்களை மீட்கும் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதேநேரம் இத்துயரச் சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் நாட்டின் சார்பாக துக்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

No comments