நீதிமன்றம் செல்வோம்!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.  

அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேசத்தை நாட முடியாத நிலை உருவாகும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில்  அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டாலும் எதிர்கட்சி அதனை எதிர்க்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள போதிலும் திருத்தங்களுடன் அரசாங்கம் அதனை இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டதும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்வதற்கு இரண்டுவாரங்கள் உள்ளன எனவும் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.


No comments