சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கம்!
அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சார்ந்த அனைத்து கட்டமைப்புக்களும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம், உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி அழுத்தங்களால் பதவி விலக நிர்ப்பந்திக்கபட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அது இந்த நாட்டின் நீதிப் பொறிமுறையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது எனவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் சட்டவாக்க சபையான நாடாளுமன்றை ஒட்டு மொத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குருந்தூர் சட்டவிரோத பௌத்த கட்டுமானம் தொடர்பாக நீதியான தீர்ப்பு வழங்கியமைக்காக தொடர் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நீதிபதியின் நேர்மையை போற்றும் வகையில் தமிழ்ச்சமூகமாக ஆதரவை வெளிப்படுத்துகிறோம்.
முடிவுக்கு காரணமான அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சாரந்த அனைத்து கட்டமைப்புக்ளும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் வேண்டுகின்றோம் எனவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Post a Comment