இம்முறை அமைதியாக அஞ்சலி!

 


திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நல்லூர் சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அமைதியாகவும் உணர்வுபூர்வமாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது.

திலீபனின் நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி அவரது உருவப்படத்திற்கு மலர் மலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு இதயபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மழையையும் பொருட்படுத்தாது அதிகளவிலானவர்கள் ஒன்று திரண்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பல பகுதிகளிலிருந்து முன்னெடுக்கப்பட்ட வாகனப்பேரணிகள் திலீபனின் நினைவாலயத்தை வந்தடைந்தன.

இதேவேளை கிட்டு பூங்காவிலிருந்து ஆரம்பமான மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் நடை பவனியும் திலீபனின் நினைவாலயத்தை வந்தடைந்தன.

இதனிடையே இறுதி நாள் நிகழ்வில் இளைஞர் ஒருவரால், தூக்குக் காவடி எடுத்து திலீபனுக்கு வலி சுமந்த அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அமைதியாக குழப்பங்கள் ஏதுமற்றதாக மக்கள் மற்றும் கட்சிகள் தமது அஞ்சலிகளினை செலுத்தி சென்றிருந்தனர்.


No comments