ஓரளவே திருப்தி: ஜஎம்எப்வ்!

 


சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி நிதியமைச்சராக கைச்சாத்திட உள்ளார்.

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளும்.

 சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள்  குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதிலும் குறிப்பிட்ட சில  செயற்பாடுகளில் மெதுவான தன்மையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் இலக்கு எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments